/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கியில் தயாந்த் வீரன்ஸ் ஏமாற்றம்
/
ஹாக்கியில் தயாந்த் வீரன்ஸ் ஏமாற்றம்
ADDED : ஆக 13, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஹாக்கி லீக் அமைப்பு சார்பில் மாவட்ட ஹாக்கி லீக் போட்டிகள், நேற்று முன்தினம் போரூரில் உள்ள தனியார் பல்கலை வளாகத்தில் துவங்கின.
இதில், எட்டு அணிகள், 'லீக்' முறையில் மோதி வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், ஹாக்கி யூனிட் ஆப் தமிழகம் மற்றும் தயாந்த் வீரன்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டியின் 46வது நிமிடத்தில், தயாந்த் வீரன்ஸ் அணி வீரர் லக்ஷ்மண் கரன் ஒரு கோல் அடித்தார்.
ஆனால், அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யூனிட் ஆப் தமிழக அணி, 52, 56, 59 ஆகிய நிமிடங்களில் வரிசையாக கோல்களை அடித்து, 3 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. வார இறுதி நாட்களில் போட்டிகள் நடக்கின்றன.