/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்
/
கோவில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்
ADDED : மே 11, 2024 12:16 AM

நங்கநல்லுார்,
நங்கநல்லுாரில் பனச்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளம், 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக, குளத்தில் இருந்த மீன்கள் திடீரென இறந்து மிதந்து வருகின்றன. இதற்கு, குளத்தில் தண்ணீர் மாசடைவது தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
குளம் நிரம்பியவுடன் மழைநீர் வருவதை தடுக்கும் வகையில்,'ஷட்டர்'கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு,'ஷட்டர்' சரியாக இயங்காததால், கழிவுநீர் குளத்தில் கலந்து தண்ணீர் மாசடைவதாகவும், இதனால் மீன்கள் இறப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மாநகராட்சியினர் தனி கவனம் செலுத்தி, குளத்தில் கழிவுநீர் கலப்பதையும், மீன்கள் இறப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.