/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டெலிவரி செய்த 4 'ஏசி' மாயம் வாடிக்கையாளர் தில்லாலங்கடி
/
டெலிவரி செய்த 4 'ஏசி' மாயம் வாடிக்கையாளர் தில்லாலங்கடி
டெலிவரி செய்த 4 'ஏசி' மாயம் வாடிக்கையாளர் தில்லாலங்கடி
டெலிவரி செய்த 4 'ஏசி' மாயம் வாடிக்கையாளர் தில்லாலங்கடி
ADDED : ஆக 29, 2024 12:18 AM
தண்டையார்பேட்டை,
அம்பத்துார் 2வது எஸ்டேட், அம்பித் பார்க் சாலையைச் சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர், 62; எலக்ட்ரானிக் சேல்ஸ் பிரைவெட் லிமிடெட் மேலாளர்.
இவர் பணிபுரியும் நிறுவனத்தின் வாடிக்கையாளரான, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கதுரை என்பவர், கடந்த 16ம் தேதி, ஆறு 'ஏசி'க்களை ஆர்டர் செய்துள்ளார்.
அவர் கூறியபடி, கடந்த 21ம் தேதி, தண்டையார்பேட்டை, எம்.எம்.தியேட்டர் அருகில் நான்கு 'ஏசி'களை டெலிவரி செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு 'ஏசி'க்களை தன் கடையில் 'டெலிவரி' செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். பின் தங்கதுரை கொடுத்த முகவரிக்கு சென்று ஊழியர்கள் பார்த்தபோது, கடை பூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஏற்கனவே நான்கு 'ஏசி'க்கள் டெலிவரி செய்யப்பட்ட இடத்தில் வந்து பார்த்தபோது, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 'ஏசி'க்கள் மாயமாகி இருந்தன. அதன்பின், தங்கதுரை குறித்து எந்த தகவலும் தெரியாததால், தண்டையார்பேட்டை போலீசாரிடம் ஜான் அலெக்சாண்டர் புகார் அளித்துள்ளார்.