/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்னடப்பாளையத்தில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை
/
கன்னடப்பாளையத்தில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை
கன்னடப்பாளையத்தில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை
கன்னடப்பாளையத்தில் தேங்கிய குப்பையை அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 27, 2024 12:06 AM
தாம்பரம், தாம்பரம் கன்னடப்பாளையத்தில் மலை போல் தேங்கியுள்ள குப்பையை அகற்ற வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் உளனர்.
மேற்கு தாம்பரம், கன்னடபாளையத்தில் குப்பை கிடங்கு உள்ளது. தாம்பரம், நகரமாக இருந்த போது சேகரமாகிய குப்பையை, இங்கு கொட்டினர். காலப்போக்கில் அதிகரித்து, குப்பை கிடங்காகவே மாற்றி, அதிக அளவில் வாகனங்களில் குப்பையை கொண்டு வந்து கொட்டினர்.
தொடர்ந்து 40 ஆண்டுகள் கொட்டப்பட்டதால், பல ஆயிரம் டன் குப்பை மலை போல் தேங்கியது. துர்நாற்றம், கொசு மற்றும் ஈ தொல்லையும் அதிகரித்து, கன்னடப்பாளையம் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.
தோல் பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் அதிகரித்தன.
நிலத்தடிநீர் கெட்டு, அங்கு வசிக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. கிடங்கை காலி செய்து, மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என போராடினர். 40 ஆண்டுகள் போராட்டத்தின் விடிவாக, பல மாதங்களுக்கு முன், அங்கிருந்த குப்பை முழுதுமாக அகற்றி, ஆப்பூர் அருகேயுள்ள கொளத்துாரில் கொட்டினர்.
அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், மீண்டும் குப்பையை கொட்டி, மலை போல் தேக்கி விட்டனர். இதனால், மீண்டும் மூச்சு திணறல், தொற்று நோயால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சியில், மாதந்தோறும் பல கோடி ரூபாயை செலவழித்தும், குப்பை பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல், நிர்வாகம் திணறி வருவது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குப்பை கிடங்கில் அடிக்கடி தீப்பிடிப்பதால், பாதிப்பு அதிகரித்து அங்கு வசிக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டு உள்ளது.
அதனால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, குடியிருப்பை ஒட்டியுள்ள கன்னடப்பாளையம் கிடங்கில் இருந்து குப்பையை முழுமையாக அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

