/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் பொருட்கள் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் பொருட்கள் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 12:32 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை மண்டல அலுவலகத்தின் கீழ், மணலி, திருவொற்றியூர், எண்ணுார், மணலிபுதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில், 104 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கடைகளில், மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு உள்ளது. இதன் காரணமாக, பெண்கள் பலரும் மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று, வெறும் கையோடு வீடு திரும்ப வேண்டிய சூழல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும், பாமாயில், துவரம் பருப்பு வழங்கக்கோரி, அனைத்திந்திய மாதர் சங்கம் - திருவொற்றியூர், எண்ணுார் பகுதி குழுவினருடன் இணைந்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் என, 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை திருவொற்றியூர் உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின், போலீசார் சமாதானத்தை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதில், மாவட்ட செயலர் பாக்கியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.