/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கள்ளுக்கடை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
/
கள்ளுக்கடை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 04, 2024 01:40 AM

சென்னை:தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க, அரசு அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் நாடார் சங்க அமைப்புகள் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபால் தலைமை வகித்தார். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க, அரசு அனுமதிக்க வேண்டும். பனை மரம் ஏறும்போது தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.
பனை தொழிலாளர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். கருப்பட்டி உள்ளிட்ட பனை பொருட்களை ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை வேளாண் கல்லுாரி உருவாக்கியுள்ள பனைமரம் ஏறும் இயந்திரத்தை, தொழிலாளர்களுக்கு அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.