/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர், மோர் பந்தலுக்கு அனுமதி மறுப்பு அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம்
/
நீர், மோர் பந்தலுக்கு அனுமதி மறுப்பு அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம்
நீர், மோர் பந்தலுக்கு அனுமதி மறுப்பு அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம்
நீர், மோர் பந்தலுக்கு அனுமதி மறுப்பு அ.தி.மு.க.,வினர் வாக்குவாதம்
ADDED : ஏப் 26, 2024 12:40 AM
திருவொற்றியூர், 'கோடை வெயில் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில், அ.தி.மு.க., சார்பில், கட்சியினர் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர், மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர்.
அந்த வகையில், திருவொற்றியூரில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் ஏற்பாட்டில் திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, வடசென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோர் நீர், மோர் பந்தலை திறந்து வைத்து, மோர், இளநீர், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, குளிர்பானங்கள் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினர்.
தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் உதவி செயற்பொறியாளர் மனோஜ்குமார் தலைமையிலான மாநகராட்சியினர், அ.தி.மு.க., கொடி, பந்தல், தண்ணீர் பந்தல் வைப்பதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
உடனே, 'தேர்தல் முடிந்து விட்டது; இது மக்களுக்கான சேவை' என, முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின், தண்ணீர் பந்தல்களை அப்புறப்படுத்துவதாக அ.தி.மு.க.,வினர் தெரிவித்ததையடுத்து, மாநகராட்சியினர் கலைந்து சென்றனர்.

