/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமை பொறியாளர்களுக்கு மாநகராட்சியில் துறைகள் ஒதுக்கீடு
/
தலைமை பொறியாளர்களுக்கு மாநகராட்சியில் துறைகள் ஒதுக்கீடு
தலைமை பொறியாளர்களுக்கு மாநகராட்சியில் துறைகள் ஒதுக்கீடு
தலைமை பொறியாளர்களுக்கு மாநகராட்சியில் துறைகள் ஒதுக்கீடு
ADDED : மார் 04, 2025 12:15 AM
சென்னை, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சியின் பொது தலைமை பொறியாளராக இருந்த ராஜேந்திரன், மற்றொரு தலைமை பொறியாளர் சக்தி மணிகண்டன் ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதைத் தொடர்ந்து, கண்காணிப்பு பொறியாளராக இருந்த விஜயகுமார், பாபு ஆகியோர், பதவி உயர்வு பெற்று, தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொது தலைமை பொறியாளராக விஜயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, சாலை, மழைநீர் வடிகால், அனைத்து மண்டல மற்றும் அரசு திட்டங்கள், பாலம், கட்டடம், கல்வி உள்ளிட்ட, 13 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்றொரு தலைமை பொறியாளரான பாபுவுக்கு, திடக்கழிவு மேலாண்மை, மெக்கானிக்கல், மயான பூமி, கழிப்பறை உள்ளிட்ட ஆறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், கண்காணிப்பு பொறியாளர்கள் சங்கரவேலு, ராஜேஸ்வரி, பாஸ்கரன் ஆகியோருக்கும் கூடுதல் துறைகளை ஒதுக்கி, கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.