/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி எச்சரித்தும் அலட்சியம் சாலையில் வாகனம் நிறுத்தி அட்டூழியம்

ADDED : பிப் 24, 2025 03:06 AM

அயனாவரம்:அண்ணா நகர் மண்டலம், அயனாவரம் பிரதான சாலை வழியாக, கீழ்ப்பாக்கம், அயனாவரம் சந்தை, ஓட்டேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நியூ ஆவடி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு, ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
போக்குவரத்து நிறைந்த அயனாவரம் பிரதான சாலையில், ஏராளமான தனியார் வாகனங்கள், கேட்பாரற்ற வாகனங்களும் பல மாதங்களாக நிற்கின்றன.
இதுகுறித்து, நம் நாளிதழில் பல முறை செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சாலையோரங்களில் மீண்டும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என, வாகன உரிமையாளர்களுக்கு, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.
எனினும், பல நாட்களாகியும், உரிமையாளர்கள் வாகனங்களை எடுத்துச் செல்லாமல் அலட்சியமாகவே இருக்கின்றனர்.
இதை தடுக்க வேண்டிய, போக்குவரத்துபோலீசார் கண்டுக்கொள்ளாமல் உள்ளனர். சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களை முழுமையாக அகற்றி, உரிய நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.