/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.600 கோடியில் புதிய வசதிகள் விரிவான திட்ட அறிக்கை தயார்
/
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.600 கோடியில் புதிய வசதிகள் விரிவான திட்ட அறிக்கை தயார்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.600 கோடியில் புதிய வசதிகள் விரிவான திட்ட அறிக்கை தயார்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.600 கோடியில் புதிய வசதிகள் விரிவான திட்ட அறிக்கை தயார்
ADDED : ஆக 07, 2024 12:28 AM
சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தை பல்வேறு வசதி களுடன் 600 கோடி ரூபாயில் மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது.
எனவே, தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், கூடுவாஞ்சேரி சுற்றுவட்டாரப் பகுதியினர், தாம்பரம் ரயில் முனையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணியரின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை தாண்டிஉள்ளது.
இதற்கிடையே, தாம்பரம் ரயில் நிலையம் 600 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே, சென்னை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தாம்பரம் ரயில் முனையத்தை படிப்படியாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, 100 கோடி ரூபாயில் யார்டு மேம்பாடு, நடைமேடைகள் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, இந்த ரயில் நிலையத்தில், தனியார் மற்றும் ரயில்வே பங்களிப்போடு 600 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ரயில் நிலையத்தில் கூரை புதுப்பிப்பு, கூடுதல் லிப்ட், எஸ்கலேட்டர் வசதி, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவது, பிரமாண்ட வாகன நிறுத்தம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், பயணியர் ஓய்வு அறை, நுழைவுப்பகுதியில் வணிக வளாகங்கள் இடம் பெற உள்ளன.
இங்கிருந்து கூடுதல் ரயில்கள் இயக்க நடைமேடைகள் அதிகரிக்கப்படும். நடைமேடைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிக்கையை இறுதி செய்து, விரைவில் வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.