ADDED : மே 08, 2026 11:02 PM
சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, ஆறு ரயில்களின் சேவை முழுதுமாகவும், 20 ரயில்களின் சேவை ஒரு பகுதியாகவும் ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில் ரயில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
★ கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூர் – சென்ட்ரல் ரயில் வரும் ஜூலை 31ம் தேதியிலும், சென்ட்ரல் – யஷ்வந்த்பூர் ரயில் வரும் ஆக., 1ம் தேதியிலும் ரத்து செய்யப்படுகிறது
★ யஷ்வந்த்பூர் – கர்நாடகா மாநிலம் மங்களூரு ரயில் வரும் ஆக., 2ம் தேதியிலும், மங்களூரு – யஷ்வந்த்பூர் வரும் ஆக., 3ம் தேதியிலும் ரத்து செய்யப்படுகிறது
★ கர்நாடகா மாநிலம் மைசூர் – ரேணிகுண்டா ரயில் வரும் ஜூலை 31ம் தேதியிலும், ரேணிகுண்டா – மைசூர் ரயில் வரும் ஆக., 1ம் தேதியிலும் ரத்து செய்யப்படுகிறது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
