/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10.68 கோடியில் மேம்பாட்டு பணி பூங்கா ரயில் நிலையத்தில் தீவிரம்
/
ரூ.10.68 கோடியில் மேம்பாட்டு பணி பூங்கா ரயில் நிலையத்தில் தீவிரம்
ரூ.10.68 கோடியில் மேம்பாட்டு பணி பூங்கா ரயில் நிலையத்தில் தீவிரம்
ரூ.10.68 கோடியில் மேம்பாட்டு பணி பூங்கா ரயில் நிலையத்தில் தீவிரம்
ADDED : ஏப் 28, 2024 01:10 AM

சென்னை:பூங்கா ரயில் நிலையத்தில் 10.68 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே ரயில் நிலையங்களை நவீனப்படுத்துவதற்காக, மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, பூங்கா ரயில் நிலையத்தின் மேம்பாட்டு பணிகள், 10.68 கோடி ரூபாய் செலவில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள பூங்கா நகர் ரயில் நிலையம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக திகழ்கிறது.
இந்த ரயில் நிலையத்தில் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் பெறுவதற்கு வசதியாக,'புக்கிங்' அலுவலகம் கட்டப்படுகிறது.
அதேபோல், பயணியர் ஓய்வு எடுப்பதற்கு வசதியாக நவீன ஓய்வு அறைகள் அமைக்கப்படுகின்றன.
பயணியர், மாற்றுத்திறனாளி பயணியர் தங்களுடைய பெட்டிகளை எளிதாக கொண்டு செல்லும் வகையில், நடைமேடைகளில் தரை வசதி அமைக்கப்படுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் எம்.ஆர்.டி.எஸ்., ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கான வழிகள் நவீனப்படுத்தப்படும்.
நடைமேடைகளில் நவீன ரக கூரைகள் மற்றும் கூடுதல் கூரைகள், பயணியர் அமர்வதற்கு இருக்கைகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன. மூன்று மின்துாக்கிகள், தகவல் பலகை, நவீன ஒலிபெருக்கி வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும்.
இந்த ரயில் நிலையத்தில் நடைமேடை 1, 2 மற்றும் 1ஏ ஆகியவற்றில், மேம்பாட்டு பணிகள், 50 சதவீதம் நிறைவடைந்து உள்ளன.
இதேபோல், நடைமேடை கூரைகள் அமைக்கும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது. அனைத்து பணிகளையும் முடித்து, வரும் டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

