/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குன்றத்துார் சாலையில் நெரிசல் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி
/
குன்றத்துார் சாலையில் நெரிசல் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி
குன்றத்துார் சாலையில் நெரிசல் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி
குன்றத்துார் சாலையில் நெரிசல் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி
ADDED : ஆக 09, 2024 12:33 AM

குன்றத்துார், குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்து, முருகன் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலை, ஏற்கனவே குறுகலாக உள்ளது. இதில், போக்குவரத்திற்கு இடையூறாக, சாலை நடுவே மின்கம்பங்கள் உள்ளன.
தவிர, சாலையை ஆக்கிரமித்து வணிக கடைகளின் முன்பக்கக் கூரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால், இப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், முகூர்த்த நாட்களில் மலை கோவிலிலும், தனியார் மண்டபங்களிலும் அதிகளவில் திருமணம் நடக்கிறது.
இதில் பங்கேற்கவும், முருகனை வழிபடவும் வாகனங்களில் அதிகம் பேர் வந்து செல்வதால், இந்த சாலையில் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.
இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி வைத்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.