/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.என்.ஜி.,யாக மாற்றியதால் அரசு பஸ் தீப்பிடித்ததா?
/
சி.என்.ஜி.,யாக மாற்றியதால் அரசு பஸ் தீப்பிடித்ததா?
சி.என்.ஜி.,யாக மாற்றியதால் அரசு பஸ் தீப்பிடித்ததா?
சி.என்.ஜி.,யாக மாற்றியதால் அரசு பஸ் தீப்பிடித்ததா?
ADDED : ஜூலை 04, 2024 12:28 AM
சென்னை, பிராட்வே - சிறுசேரி இடையே இயக்கப்பட்ட தடம் எண்: 102 என்ற மாநகர பேருந்து, தனியார் நிறுவனம் வாயிலாக சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் வகையில், கடந்த 28ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம், இப்பேருந்தின் இன்ஜின் தீ பற்றி எரிந்தது.
இந்த தீயால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த பேருந்து, அடையாறு பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பேருந்தில் தீ பற்றியது குறித்து, வட்டார போக்குவரத்து துறையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், கே.கே.நகர் பணிமனையில் இருந்து சோதனை முறையில் இயக்கப்படும் இரண்டு எல்.என்.ஜி., பேருந்துகளிலும், ஆய்வு நடத்தப்பட்டது. சி.என்.ஜி.,யாக மாற்றப்பட்டதால் பேருந்தில் தீப்பிடித்ததா என்பது, ஆய்வு முடிவுகளை பொறுத்தே கண்டறிய முடியும்.
மேலும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.