ADDED : ஆக 06, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்சேலையூர் அடுத்த பதுவஞ்சேரியைச் சேர்ந்தவர் அரவிந்த், 29. தன் சகோதரர் கவின்குமாருடன், நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள ஆவின் பூத்திற்கு சென்றார்.
அப்போது, மூன்று பால் பாக்கெட் கேட்டதாகவும், அதற்கு கடை ஊழியர், ஒரு பாக்கெட் மட்டுமே தருவதாக கூறியதாகவும் தெரிகிறது.
அப்போது, அவர்களுக்குள் தகராறு முற்றி, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அரவிந்த் கையில் கத்திரிக்கோல் கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலையூர் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்.