/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இயற்கை மருத்துவ சிகிச்சையில் கரைந்த தைராய்டு கட்டி
/
இயற்கை மருத்துவ சிகிச்சையில் கரைந்த தைராய்டு கட்டி
இயற்கை மருத்துவ சிகிச்சையில் கரைந்த தைராய்டு கட்டி
இயற்கை மருத்துவ சிகிச்சையில் கரைந்த தைராய்டு கட்டி
ADDED : ஜூலை 26, 2024 12:35 AM

சென்னை, கழுத்தில் 5.7 செ.மீ., தைராய்டு கட்டியால், ஐந்தாண்டுகளுக்கு மேல் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் தீர்வு கிடைத்துள்ளது.
சென்னை அம்பத்துாரை சேர்ந்தவர் ஆனந்தசெல்வி, 43. இவர், தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டார். அவரது கழுத்தின் வலது பக்கத்தில், 5.7 செ.மீ., மற்றும் இடது பக்கத்தில் 1.7 செ.மீ., அளவுக்கு வீக்கம் இருந்தது. இதற்காக, பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் தீர்வு ஏற்படவில்லை. அறுவை சிகிச்சை செய்து அகற்றலாம் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு, யோகாசனம் மற்றும் இயற்கை மருத்துவ முறையில், தைராய்டு கட்டி குறைக்கப்பட்டதுடன், புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் ஒய்.தீபா கூறியதாவது:
தைராய்டு கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மண் சிகிச்சை, அக்குபஞ்சர், நிற சிகிச்சை, விதை சிகிச்சை, கழுத்து பட்டி சிகிச்சை, வாழை இலை குளியல், நீராவி குளியல் போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. மேலும், சில யோகாசன பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தொடர்ந்து, 15 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சையில், இடது பக்க வீக்கம் முற்றிலும் குறைந்து, வலது பக்க வீக்கத்தின் அளவும் 3.7 செ.மீ., ஆக குறைந்தது. தற்போது, தைராய்டு அளவும் சரியாக இருப்பதால், அவர் வீடு திரும்பியுள்ளார்.
ஓராண்டுக்கு முன், மற்றொரு பெண்ணுக்கு இதேபோன்று சிகிச்சை அளிக்கப்பட்டு, இதுவரை தைராய்டு பிரச்னை இல்லாமல், நலமுடன் வாழ்த்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, ஆனந்த செல்வி கூறுகையில், ''தைராய்டு பிரச்னைக்கு பல டாக்டர்களிடம் ஆலோசனை பெற்றேன். சிலர், புற்றுநோயாக இருக்கலாம்; அறுவை சிகிச்சை தான் மேற்கொள்ள வேண்டும் என்றனர். இதன்பின், யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறை சிகிச்சைக்கு வந்ததால், தீர்வு கிடைத்தது,'' என்றார்.