/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகளுக்கான மாவட்ட வாலிபால் டி.இ.எல்.சி., டான் போஸ்கோ 'சாம்பியன்' செம்மஞ்சேரி ஜேப்பியார் ஏமாற்றம்

ADDED : ஆக 01, 2024 01:05 AM

சென்னை, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் சான் அகாடமி குரூப் ஆப் ஸ்கூல் இணைந்து, சென்னை சிட்டி பள்ளிகளுக்கான வாலிபால் போட்டியை, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடத்தின.
இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து, மாணவர்களில் 29 அணிகளும் மாணவியரில் 19 அணிகளும் பங்கேற்றன.
கடந்த மூன்று நாட்களாக போட்டிகள் நடந்தன. இறுதிப்போட்டிகள் நேற்று நடந்தன. இதில், மாணவியரில் செம்மஞ்சேரி ஜேப்பியார் பள்ளி அணியும், புரசைவாக்கம் டி.இ.எல்.சி., பள்ளி அணியும் மோதின.
இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால், துவக்கம் முதலே ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
இதில், டி.இ.எல்.சி., அணி முதல் செட்டை 18 - -25 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தது. ஆனால், அடுத்த இரண்டு செட்களை 25- - 23, 25- - 16 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இரண்டாம் இடத்தை செம்மஞ்சேரி ஜேப்பியார் பள்ளி அணியும், மூன்றாம் இடத்தை பெரம்பூர் அரசு பள்ளி அணியும் வென்றன.
சிறந்த வீராங்கனையாக மாதவரம் அரசு பள்ளி மாணவி பவித்ரா தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்து நடந்த ஆண்களுக்கான இறுதிப்போட்டியில், பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளி அணியும், செம்மஞ்சேரி ஜேப்பியார் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அனல் பறந்த இந்த ஆட்டத்தில் 26 - 24, 25 - 22 என்ற நேர்செட்களில் டான் போஸ்கோ அணி த்ரில் வெற்றி பெற்று சாம்பியனானது. செம்மஞ்சேரி ஜேப்பியார் அணி இரண்டாம் இடத்தை பெற்றது.
மூன்றாம் இடத்தை அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி அணி வென்றது. சிறந்த வீரரராக, சென்ட் பீட்ஸ் பள்ளி மாணவர் சிவபாலா தேர்வானார்.