ADDED : ஜூலை 15, 2024 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை:தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டலம், 27வது வார்டு, சாஸ்திரி காலனி, 2வது தெருவில், பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
இத்தெருவில் அடைப்பு ஏற்பட்டு, இயந்திர நுழைவாயில் மூடியின் வழியாக, நான்கு மாதங்களாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
இது குறித்து, மாநகராட்சியில் புகார் தெரிவித்தால், கழிவுநீர் அடைப்பு அகற்றும் சிறிய வாகனத்தை எடுத்து வந்து அடைப்பை நீக்குகின்றனர்.
எனினும், குறிப்பிட்ட நாள் இடைவெளியில்கழிவுநீர் தொடர்ந்து வெளியேறுவதால், அப்பகுதியில் துர்நாற்றமும், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.