/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியவரின் உயிரை காவு வாங்கிய 'பள்ளம்'
/
முதியவரின் உயிரை காவு வாங்கிய 'பள்ளம்'
ADDED : செப் 09, 2024 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை:மடிப்பாக்கம், லட்சுமிநகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் சந்திராச்சேரி, 68. இவர், மேற்கு தாம்பரத்தில் பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். உள்ளகரம், ராமமூர்த்தி நகர் அருகே சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தில் வாகனம் இறங்கியதில், திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.