/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிவிசன் கிரிக்கெட் லீக் திருவள்ளூர் சி.சி., அபாரம்
/
டிவிசன் கிரிக்கெட் லீக் திருவள்ளூர் சி.சி., அபாரம்
டிவிசன் கிரிக்கெட் லீக் திருவள்ளூர் சி.சி., அபாரம்
டிவிசன் கிரிக்கெட் லீக் திருவள்ளூர் சி.சி., அபாரம்
ADDED : மே 07, 2024 12:26 AM

சென்னை, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டிகள், திருவள்ளூரில் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன.
நேற்று முன்தினம், ரெட்ஹில்ஸில் நடந்த முதலாவது டிவிசன் போட்டியில், முதலில் பேட் செய்த, அத்தீஸ் சி.சி., அணி, 44.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 155 ரன்களை அடித்தது. எதிர் அணியின் வீரர் ஈஸ்வர் ஐந்து விக்கெட் எடுத்து 44 ரன்களை கொடுத்தார்.
அடுத்து பேட் செய்த திருவள்ளூர் சி.சி., அணி, 30.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து, 158 ரன்களை அடித்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அணியின் வீரர் சடகோபன், 109 பந்துகளில் ஐந்து சிக்சர், ஆறு பவுண்டரி என, 102 ரன்களை அடித்து வெற்றிக்கு கைக்கொடுத்தார். மற்றொரு போட்டியில், முதலில் பேட் செய்த கொரட்டூர் சி.சி., அணி, 44.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 173 ரன்களில் ஆட்டமிழந்தது. எதிர் அணியின் வீரர் பரத் ஐந்து விக்கெட் எடுத்து, 31 ரன்களை கொடுத்தார்.
அடுத்து பேட் செய்த, ஸ்ரீஹர் ஆர்.சி., அணி, 39 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 174 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.