sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கிராமப்புற ஓட்டுகளை வளைக்க தே.மு.தி.க., - அ.தி.மு.க., திட்டம்

/

கிராமப்புற ஓட்டுகளை வளைக்க தே.மு.தி.க., - அ.தி.மு.க., திட்டம்

கிராமப்புற ஓட்டுகளை வளைக்க தே.மு.தி.க., - அ.தி.மு.க., திட்டம்

கிராமப்புற ஓட்டுகளை வளைக்க தே.மு.தி.க., - அ.தி.மு.க., திட்டம்


ADDED : ஏப் 11, 2024 12:08 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவள்ளூர் தனித் தொகுதி, அ.தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி, பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று, திருவாலங்காடு ஒன்றிய பகுதிகளில் ஓட்டு சேகரிக்க வாகனத்தில் வந்தார். அவருடன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரமணாவும், பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், 'தேர்தலில் களம் காணும் பிரதான வேட்பாளர்கள், கிராமங்களுக்குள் சென்று ஓட்டு கேட்பதில்லை. ஓரிடத்தில் மட்டும் பேசிவிட்டு செல்கின்றனர். கிராமங்களில் இருக்கும் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும்' என கட்சியினருக்கு கூறி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதையடுத்து, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், பிரதான கட்சி வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்காத பகுதிகளுக்கு நேற்று சென்ற இவர்கள், அங்குள்ள மக்களிடம் ஓட்டு கேட்டனர்.

நார்த்தவாடா, பழையனுார், வியாசபுரம் உட்பட 17 கிராமங்களை தேர்வு செய்து, வாகனங்களிலும், நடந்தும் சென்று பிரசாரம் செய்தனர். இந்த கிராமங்களில் 18 ஆயிரத்து 106 ஓட்டுகள் உள்ளன.

இந்த வாக்காளர்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, அ.தி.மு.க.,வினர் கூறினர்.






      Dinamalar
      Follow us