ADDED : ஜூன் 22, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
ஆலந்துார்: ஆலந்துார் மண்டலம், 160வது வார்டு தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல்கள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் அருகில் தி.மு.க., பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்து நாசமாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக, வார்டு கவுன்சிலர் தி.மு.க.,வைச் சேர்ந்த பிருந்தாவின் தந்தையும், முன்னாள் கவுன்சிலருமான முரளி கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
