/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்களிடம் தி.மு.க., நிர்வாகி சமரச பேச்சு
/
காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்களிடம் தி.மு.க., நிர்வாகி சமரச பேச்சு
காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்களிடம் தி.மு.க., நிர்வாகி சமரச பேச்சு
காஞ்சி அதிருப்தி கவுன்சிலர்களிடம் தி.மு.க., நிர்வாகி சமரச பேச்சு
ADDED : ஜூலை 26, 2024 12:14 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, வரும் 29ம் தேதி, நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் அவர் பதவி மீதான ஓட்டெடுப்பும் நடக்க உள்ளது.
மேயருக்கு எதிராக, தி.மு.க.,வின் அதிருப்தியாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
இதற்கிடையே, மேயருக்கு ஆதரவாக மிஷனர் செந்தில்முருகன் செயல்படுவதாக கூறி, இரு நாட்களாக அதிருப்தி கவுன்சிலர்கள் மாநகராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அதிருப்தி கவுன்சிலர்களை சமாதானம் செய்ய, சென்னையில் இருந்து, தி.மு.க.,வின் அமைப்பு செயலர் அன்பகம் கலை, காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்தார். பொன்னேரிக்கரையில் உள்ள நட்சத்திர விடுதியில், தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து நேற்று காலை பேச்சு நடத்தினார்.
உடன், மாவட்ட செயலர் சுந்தர், மாநகர செயலர் தமிழ்ச்செல்வன், மேயர் மகாலட்சுமி கணவர் யுவராஜ் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். இதில், மேயர் மகாலட்சுமி பங்கேற்கவில்லை.
மேயர் மீதான குற்றச்சாட்டுகளை, அதிருப்தி கவுன்சிலர்கள் அன்பகம் கலையிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு, கட்சியின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் எனவும், நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என, அன்பகம் கலை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இரண்டு மணி நேரம் நடந்த பேச்சில், கவுன்சிலர்கள் சமாதானம் ஆகாததால், மீண்டும் வருவதாகக் கூறி, அன்பகம் கலை சென்னை புறப்பட்டு சென்றார்.