தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு நிபந்தனை ஜாமின்
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : ஆக 05, 2026 09:51 PM
சென்னை, ஆக. 6–
பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இதயவர்மனுக்கு, முன் ஜாமின் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய், ஜூலை, 6ம் தேதி, சென்னையை அடுத்த நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலைக்கு சென்று, அவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
பராமரிப்பு பணி காரணமாக, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, வலையால் மறைக்கப்பட்டு இருந்தது.
இந்த வலையை சேதப்படுத்தி, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக, திருப்போரூர் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இதயவர்மன் உள்ளிட்ட இருவர் மீது, மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில், முன் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில், இதயவர்மன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இரண்டு வாரங்களுக்கு, மாமல்லபுரம் போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
***
