/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.மு.க.,வுக்கு மூன்று தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: சேகர்பாபு
/
தி.மு.க.,வுக்கு மூன்று தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: சேகர்பாபு
தி.மு.க.,வுக்கு மூன்று தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: சேகர்பாபு
தி.மு.க.,வுக்கு மூன்று தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசம்: சேகர்பாபு
ADDED : ஏப் 17, 2024 12:43 AM
சென்னை, சென்னையின் மூன்று லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அவர் கூறியதாவது:
கொரோனா பெருந்தொற்று, பெருமழை வெள்ளம், 'மிக்ஜாம்' புயல் மழையில் களத்தில் நின்று, தி.மு.க., வேட்பாளர்கள் பணியாற்றி உள்ளனர். இதை, மக்களும் நன்றாக உணர்வர்.
வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு என்பது திட்டமிட்டு துவங்கியது. நாளடைவில் அந்த எதிர்ப்புகள் எல்லாம் மங்கியுள்ளன.
ஐந்து ஆண்டுகளில், எம்.பி.,க்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக மக்கள் பணிக்கு செலவிட்டுள்ளனர். சென்னையின் மூன்று எம்.பி.,யும், லோக்சபாவில் நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர்.
தி.மு.க., தோன்றியது வடசென்னையில் தான். வடசென்னை தொகுதியில் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. வடசென்னைக்கு 4,181 கோடி ரூபாயில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம். இதுபோன்ற விரைவான பணிகளால், தி.மு.க., வேட்பாளரை மக்கள் ஆதரிப்பர்.
எங்களுக்கு, கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகள் இல்லை. தற்போதைய கள நிலவரம் கடந்த லோக்சபா தேர்தலைவிட, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.
நாட்டுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரும் போதும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் மறுக்கப்படும் போதும், ஜி.எஸ்.டி., வரியில் போதிய பங்களிப்பை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்காத போதும், சி.ஏ.ஏ., சட்டங்களை கொண்டு வந்த போதும் துணிந்து, எதிர்த்து நின்று மோடியை நேருக்கு நேர் நின்று கேட்டுள்ளோம்.
தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்; 'இண்டியா' கூட்டணியும் வெற்றி பெறும். எங்களுக்கு அடுத்த இடத்தை யார் பிடிக்க போவது என்பதுதான், அ.தி.மு.க., - பா.ஜ., - நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

