/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுவர் விளம்பரத்திற்கு தி.மு.க., ரூ.10,000 அ.தி.மு.க., ரூ.5,000
/
சுவர் விளம்பரத்திற்கு தி.மு.க., ரூ.10,000 அ.தி.மு.க., ரூ.5,000
சுவர் விளம்பரத்திற்கு தி.மு.க., ரூ.10,000 அ.தி.மு.க., ரூ.5,000
சுவர் விளம்பரத்திற்கு தி.மு.க., ரூ.10,000 அ.தி.மு.க., ரூ.5,000
ADDED : மார் 30, 2024 12:25 AM
அரக்கோணம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க., வேட்பாளர் விஜயன், பா.ம.க., வேட்பாளர் வழக்கறிஞர் பாலு ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
மூன்று வேட்பாளர்களும், தொகுதி முழுதும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டியும், வேன் வாயிலாகவும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சுவர் விளம்பரம் கிராமங்களில் எழுதுவதற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக, தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஒவ்வொரு கிராமத்திற்கும் 10,000 ரூபாயும், அ.தி.மு.க., வேட்பாளர் விஜயன் ஒவ்வொரு கிராமத்திற்கும் 5,000 ரூபாய் வீதம் அந்தந்த பகுதி கிளை மற்றும் வட்டச் செயலர்களிடம் வழங்கி உள்ளனர்.
அதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு வார்டுக்கும், நகர, பேரூர் செயலர்கள் மூலம் வார்டு வட்டப் பிரதிநிதிகளிடம் தி.மு.க., 18,000 ரூபாய், அ.தி.மு.க., 10,000 ரூபாய் வழங்கியுள்ளனர்.
பா.ம.க., வேட்பாளர் பாலு இதுவரை சுவர் விளம்பரத்திற்கு பணம் வழங்காததால், அக்கட்சி நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர்.
- ---நமது நிருபர் -

