/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்நிலைகள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் த.மா.கா., வேணுகோபால் வாக்குறுதி
/
நீர்நிலைகள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் த.மா.கா., வேணுகோபால் வாக்குறுதி
நீர்நிலைகள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் த.மா.கா., வேணுகோபால் வாக்குறுதி
நீர்நிலைகள் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் த.மா.கா., வேணுகோபால் வாக்குறுதி
ADDED : ஏப் 13, 2024 12:16 AM

தாம்பரம், தேசிய ஜனநாயக கூட்டணியில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிடும் த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் நேற்று, வீதி வீதியாக சென்று சைக்கிள் சின்னத்திற்கு ஓட்டு கேட்டார்.
அப்போது, அவர் கூறியதாவது:
தற்போது எம்.பி.யாக உள்ள டி.ஆர்.பாலு, பதவி ஆசையில், மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் நேரத்தில் மக்களை தேடி வரும் டி.ஆர்.பாலு, வெற்றி பெற்றவுடன், மக்கள் சந்திக்க வேண்டும் என்றால், காத்திருக்கும் நிலைமை தான் உள்ளது.
த.மா.கா., சார்பில் போட்டியிடும் நான் அப்படியில்லை. தாம்பரம் நகராட்சி கவுன்சிலராக மக்கள் பணி செய்துள்ளேன். என் மனைவி, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலராக தற்போது உள்ளார்.
டி.ஆர்.பாலுவை போல், என்னை சந்திக்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கூப்பிட்ட உடன் ஓடோடி வருவேன். ஓரிடத்தில் பிரச்னை என்றால், நானே நேரில் வந்து, பிரச்னையை சரிசெய்வேன்.
தாம்பரம், பல்லாவரத்தில், 10க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் கழிவுநீர் கலந்து, நாசமாகிவிட்டன. இப்படியே போனால், எதிர்காலத்தில் குடிநீர் பிரச்னைக்காக அலையும் அவலம் ஏற்படும்.
தாம்பரம் மாநகராட்சியில், தாம்பரம், பல்லாவரத்தைத் தவிர மற்ற பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் நான் வெற்றி பெற்றால், தாம்பரம், பல்லாவரத்தில், கழிவுநீரால் நாசமான நீர்நிலைகளை சுத்தப்படுத்தி, மழைநீர் தேக்கமாக மாற்றுவதோடு, தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவதே என் முதல் பணியாக இருக்கும்.
பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்படும் தாம்பரம் மேம்பாலத்தில், முடிச்சூர் சாலை வழியாக இறங்கும் இடத்தில் அணுகு சாலை அமைக்க, நிலத்தை கையகப்படுத்தி, ஆக வேண்டிய பணியை செய்வேன் என உறுதி கூறுகிறேன்.
குரோம்பேட்டை வைஷ்ணவா ரயில்வே கேட்டில், கனரக வாகன சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
டி.ஆர்.பாலுவை சந்தித்து மனு கொடுத்தும், அது நிறைவேறவில்லை. மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைந்ததும், ரயில்வே அமைச்சரிடம் பேசி, கனரக வாகன சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

