/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சொந்த பணத்தில் உதவும் தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் தமிழச்சி பெருமிதம்
/
சொந்த பணத்தில் உதவும் தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் தமிழச்சி பெருமிதம்
சொந்த பணத்தில் உதவும் தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் தமிழச்சி பெருமிதம்
சொந்த பணத்தில் உதவும் தி.மு.க., தேர்தல் பிரசாரத்தில் தமிழச்சி பெருமிதம்
ADDED : ஏப் 02, 2024 12:23 AM

சென்னை, ''கல்லுக்குட்டை பகுதியில், சொந்த செலவில் 5 கி.மீ., துாரத்திற்கு குடிநீர் குழாய் அமைத்து கொடுத்துள்ளோம்,'' என, தி.மு.க., தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி கூறினார்.
சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் உள்ள, கல்லுக்குட்டை பகுதியில், தென் சென்னை தி.மு.க., வேட்பாளர் சுமதி என்ற தமிழச்சி, பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர் ஓட்டு சேகரித்தனர்.
பிரசாரத்தில், வேட்பாளர் தமிழச்சி கூறியதாவது:
கல்லுக்குட்டை பகுதியின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்தையும், தி.மு.க., அரசு செய்துள்ளது.
தி.மு.க., பகுதி செயலர் ரவிசந்திரன், அவரது சொந்த செலவில் 5 கி.மீ., துாரத்திற்கு, குடிநீர் குழாய்கள் அனைத்து தெருக்களுக்கும் அமைத்து கொடுத்தார். அனைத்து இணைப்புகளையும் நான் திறந்து வைத்தேன்.
ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில், உங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தவே நினைத்தனர். தி.மு.க., அரசு தான், உங்களுக்கான உரிமைகளை வழங்கி உள்ளது.
புயல், மழை பாதிக்கப்பட்டபோதும், நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன். துன்ப காலங்களில் உங்களுடன் யார் இருக்கின்றனர் என, நினைத்து ஓட்டளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழச்சி சிறந்த எம்.பி.,
சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில், தமிழச்சியை ஆதரித்து, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்த பிரசாரத்துக்கு முன், ராகுலிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது, தமிழச்சியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக, ராகுலிடம் தெரிவித்தேன்.
அதற்கு, தமிழச்சி மிக சிறந்த எம்.பி., லோக்சபாவில், தமிழகத்தின் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் என்று சொன்னார். இத்தேர்தலில், 7 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தமிழச்சி வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.

