/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பானிபூரியால் புற்றுநோய் வருமா? கர்நாடகாவை அடுத்து சென்னையில் ஆய்வு
/
பானிபூரியால் புற்றுநோய் வருமா? கர்நாடகாவை அடுத்து சென்னையில் ஆய்வு
பானிபூரியால் புற்றுநோய் வருமா? கர்நாடகாவை அடுத்து சென்னையில் ஆய்வு
பானிபூரியால் புற்றுநோய் வருமா? கர்நாடகாவை அடுத்து சென்னையில் ஆய்வு
UPDATED : ஜூலை 03, 2024 06:32 AM
ADDED : ஜூலை 03, 2024 12:16 AM

சென்னை: சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பானிபூரி, இளைஞர்களின் விருப்ப உணவு வகையாக உள்ளது. ஆனால், பானிபூரியில் புற்றுநோய்க்கான நிறமிகள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கர்நாடாகாவில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் பானிபூரி தரம் குறித்து, அம்மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பானிபூரிக்கான மசாலா நீரில் சேர்க்கப்படும் 'டை' வகையை சேர்ந்த 'ஆப்பிள் கிரீன்' நிறமியில், புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளிலும் பயன்படுத்தப்படும் பூரி மசாலா மற்றும் மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும், பயன்படுத்தப்படும் நீரின் தன்மை குறித்து ஆராயவும், தமிழக உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்டு, மசாலா நீரின் மாதிரிகளை கைப்பற்றி வருகின்றனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பானிபூரி கடைகளில், நேற்று மாலை சோதனை நடத்தப்பட்டு, நீரின் மாதிரிகளை சேகரித்து, கிண்டி கிங்ஸ் பரிசோதனை நிலையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர்.