/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரம்பூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் வருமா?
/
பெரம்பூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் வருமா?
பெரம்பூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் வருமா?
பெரம்பூர் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் வருமா?
ADDED : ஏப் 24, 2024 12:38 AM

பெரம்பூர், சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து நங்கநல்லுார், பெசன்ட்நகர், வில்லிவாக்கம், கே.கே.டி.நகர், மணலி, புத்தகரம், மீஞ்சூர், அண்ணாசதுக்கம், திருவேற்காடு, சைதாப்பேட்டை மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 10க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன் எதிரிலேயே பெரம்பூர் ரயில் நிலையம் இருப்பதால், பகுதி மக்களுக்கு மட்டுமின்றி, வெளியூர் மக்களுக்கும் பெரம்பூர் பேருந்து நிலையம் முக்கியமானதாக உள்ளது.
ஆனால், இங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பயணிகளுக்கான குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் இல்லை.
பயணியர் ஓய்வெடுக்க, நாற்காலி வசதிகளும் போதுமானதாக இல்லை.
பயணியருக்கு மட்டுமின்றி, பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் ஓய்வறையில் குடிநீர் வசதி இல்லை. அவர்கள் அனைவரும், அருகில் உள்ள கடைகளில் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர்.
ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கும் அளவிற்கு இடவசதி இருந்தும், கிராமப்புற பேருந்து நிலையம் போலவே, பெரம்பூர் பேருந்து நிலையம் உள்ளது.
எனவே, இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

