/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளிகள் இடையிலான கால்பந்து டான் பாஸ்கோ பள்ளி சாம்பியன்
/
பள்ளிகள் இடையிலான கால்பந்து டான் பாஸ்கோ பள்ளி சாம்பியன்
பள்ளிகள் இடையிலான கால்பந்து டான் பாஸ்கோ பள்ளி சாம்பியன்
பள்ளிகள் இடையிலான கால்பந்து டான் பாஸ்கோ பள்ளி சாம்பியன்
ADDED : பிப் 23, 2025 08:37 PM

சென்னை:'இண்டியன் சூப்பர் லீக்' கால்பந்து போட்டியில் பங்கேற்றுவரும் சென்னையின் எப்.சி., அணி நிர்வாகமும், இங்கிலாந்தின் நார்விச் சிட்டி எப்.சி., அணி நிர்வாகமும் இணைந்து, தமிழகத்தில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்த புதிய முயற்சிகளை எடுத்து வருகின்றன.
அதன்படி, பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் - 2025 தொடர், சென்னை சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், கடந்த ஜனவரி 24-ம் தேதி துவங்கியது.
போட்டிகள், 12 மற்றும் 14 வயது பிரிவுகளில் நடத்தப்பட்டன. இரு பிரிவுகளிலும், 64 பள்ளி அணிகள் சார்பில், 1,150 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 12 வயது பிரிவில், மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் அணி, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லுாரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணிகள், இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
அப்போட்டி சமனில் முடிந்ததால், வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட 'பெனால்டி ஷுட் அவுட்' முறையில், செயின்ட் பீட்ஸ் அணி, 3 - --2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அதன்பின், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதிப் போட்டியில், டான் போஸ்கோ பள்ளி அணி 6- - -0 என்ற கோல் கணக்கில், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் அணியை வீழ்த்தியது.
இந்தத் தொடரின் வாயிலாக, 40 இளம்வீரர்கள், சென்னையின் எப்.சி., அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

