/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபாலில் டான்பாஸ்கோ பள்ளி 'சாம்பியன்'
/
வாலிபாலில் டான்பாஸ்கோ பள்ளி 'சாம்பியன்'
ADDED : ஆக 04, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சேது பாஸ்கரா மெட்ரிக் பள்ளி சார்பில், சேது பாஸ்கரா கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், அம்பத்துாரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடக்கின்றன.
இதில், பள்ளிகளுக்கான வாலிபால், மாணவியர் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கான எறிப்பந்து மற்றும் இருபாலருக்கான கூடைப்பந்து போட்டிகள் நடக்கின்றன.
நேற்று நடந்த மாணவருக்கான வாலிபால் போட்டியில், எழும்பூர் டான்பாஸ்கோ - அம்பத்துார் சேது பாஸ்கரா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
அதில், டான்பாஸ்கோ அணி, 25 - 27, 25 - 22, 25 - 21 என்ற கணக்கில் சேது பாஸ்கரா பள்ளியை தோற்டித்து, சாம்பியன் பட்டத்தை வென்றது.