/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெற்று விளம்பரம் செய்யாதீங்க! அரசு மீது ராமதாஸ் பாய்ச்சல்
/
வெற்று விளம்பரம் செய்யாதீங்க! அரசு மீது ராமதாஸ் பாய்ச்சல்
வெற்று விளம்பரம் செய்யாதீங்க! அரசு மீது ராமதாஸ் பாய்ச்சல்
வெற்று விளம்பரம் செய்யாதீங்க! அரசு மீது ராமதாஸ் பாய்ச்சல்
ADDED : மே 27, 2024 04:09 AM

சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
கடந்த மூன்றாண்டுகளில், தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தியதற்காக, தமிழக அரசை ஆன்றோரும், சான்றோரும் பாராட்டுவதாக, தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் பயிற்று மொழி சட்டம் போன்ற ஆக்கபூர்வமான திட்டங்களை செயல்படுத்தாமல், பெயரளவிலான திட்டங்களை மட்டும் செயல்படுத்துவதால், எந்த பயனும் இல்லை.
அனைத்து பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பட்டப்படிப்பு வரை, தமிழ் மொழி கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும். முதற்கட்டமாக பள்ளிக்கல்வி வரை, தமிழை கட்டாய பயிற்று மொழியாக மாற்ற வேண்டும்.
இந்த இரு திட்டங்கள் தான், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பங்களிக்க கூடியவை. தமிழ் வளர்ச்சி என்ற இலக்கிற்கு, உயிர்கொடுக்க கூடியவை.இவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பிற விளம்பரத் திட்டங்களை செயல்படுத்துவதும், அவற்றை சாதனையாக காட்டிக் கொள்வதும், உயிரற்ற உடலுக்கு செய்யப்படும் அலங்காரமாகவே பார்க்கப்படும்.
தமிழ் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தமிழ் பயிற்று மொழி, தமிழ் கட்டாயப்பாட மொழி, கடைகளின் பெயர் பலகைகளில் தமிழ் ஆகியவற்றை உறுதி செய்வது தான். தமிழ் வளர்ச்சியில் சாதனை படைத்து விட்டதாக, வெற்று விளம்பரங்கள் செய்வதை தவிர்த்திட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

