/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா
/
டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா
ADDED : மே 12, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைந்த நடிகரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு, 'பத்ம பூஷண்' விருது சமீபத்தில் வழங்கப்பட்டதையடுத்து, டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
தமிழ்ச் சங்க செயலர் முகுந்தன், தலைவர் சக்தி பெருமாள் ஆகியோர் பிரேமலதா விஜயகாந்துக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர். உடன், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன், துணைத் தலைவர் ராகவன், இணை செயலர் சுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள்.