/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரிடம் தகராறு போதை ஆசாமிகள் கைது
/
போலீசாரிடம் தகராறு போதை ஆசாமிகள் கைது
ADDED : மார் 01, 2025 01:15 AM
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, ரத்தினசபாபதி தெருவில், தண்டையார்பேட்டை போலீசார், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை நிறுத்தி விசாரித்தனர்.
இதில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கோதண்டராமன், 33, என்பது தெரிய வந்தது.
மதுபோதையில் இருந்ததால், சோதனை கருவி மூலம் கோதண்டராமனை பரிசோதித்து, மதுபோதையில் இருந்ததை உறுதி செய்து, அபராதம் விதித்து பைக்கை பறிமுதல் செய்தனர். காலையில் பெற்றுக் கொள்ளும்படி மூவரையும் அனுப்பினர்.
சிறிது நேரம் கழித்து அதே இடத்திற்கு வந்த கோதண்டராமன் உட்பட மூவர், போலீசாரின் ஜிப்சி ரோந்து வாகனம் முன் நின்று, போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்தனர்.
போலீசார் மூவரையும் பிடித்து, தண்டையார்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், கோதண்டராமன், அவரது கூட்டாளிகள் கலைமணி, கண்ணன், 25, என்பது தெரிய வந்தது. மூவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.