ADDED : பிப் 23, 2025 09:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணகிநகர்:நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சமுதாய வளர்ச்சி பிரிவு சார்பில், 'போதையில்லா கண்ணகி நகர்' என்ற தலைப்பில், நேற்று, கண்ணகி நகரில் மாரத்தான் போட்டி நடந்தது.
இதில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, மது மற்றும் புகையிலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த பதாகைகளை பிடித்து, கோஷம் எழுப்பினர். 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன. மாரத்தான் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, அதிகாரிகள் மற்றும் போலீசார், பரிசு வழங்கினர்.