ADDED : நவ 09, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, வளசரவாக்கம், கைக்கான் குப்பம் பாரதியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், வீட்டின் உரிமையாளர் அன்பழகன், 54, தடை செய்யப்பட்ட புகையிலான, 165 கிலோ பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், போதை பொருட்கள் மற்றும் 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.