/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சவ ஊர்வலத்தில் போதையில் தகராறு: மூவருக்கு வெட்டு
/
சவ ஊர்வலத்தில் போதையில் தகராறு: மூவருக்கு வெட்டு
ADDED : ஏப் 27, 2024 12:37 AM
எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, சஞ்சய் நகரில், முனியம்மாள் என்பவரின் சவ ஊர்வலம் நேற்று நடந்தது. குடிபோதையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 23, ஜெகன், 21 ஆகியோருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில், பிரவீன்குமாரை கத்தியால் வெட்டி விட்டு ஜெகன் தப்பினார். காயமடைந்த பிரவீன்குமார் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இதற்கு பழி தீர்க்க, தன் கூட்டாளிகள் ஐவருடன் ஜெகன் வீட்டிற்கு பீரவீன்குமார் சென்றுள்ளார்.
ஜெகன் வீட்டில் இல்லாததால், அங்கிருந்த கார்த்திக், 30, ஜார்ஜ், 31 ஆகிய இருவரையும் வெட்டி விட்டு தப்பினர்.
எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து, பிரவீன்குமார், 21, ஜோஸ்வா, 25, புளியந்தோப்பு ஹவுசிங்போர்டைச் சேர்ந்த சுந்தர், 26 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

