/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்கம்பம் அகற்றாததால் வடிகால் பணி சுணக்கம் மடிப்பாக்கத்தில் கழிவுநீர் தேங்கி சீர்கேடு
/
மின்கம்பம் அகற்றாததால் வடிகால் பணி சுணக்கம் மடிப்பாக்கத்தில் கழிவுநீர் தேங்கி சீர்கேடு
மின்கம்பம் அகற்றாததால் வடிகால் பணி சுணக்கம் மடிப்பாக்கத்தில் கழிவுநீர் தேங்கி சீர்கேடு
மின்கம்பம் அகற்றாததால் வடிகால் பணி சுணக்கம் மடிப்பாக்கத்தில் கழிவுநீர் தேங்கி சீர்கேடு
ADDED : மே 16, 2024 12:31 AM

மடிப்பாக்கம், மடிப்பாக்கத்தில், மழைநீர் வடிகால் பணியில் கடும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், பல தெருக்களை கழிவுநீர் சூழ்ந்து, சுகாதார சீர்கேட்டிற்கு மக்கள் ஆளாவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் சுரேஷ்ராஜ், 39, கூறியதாவது:
பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இங்குள்ள பெரியார் நகர் விரிவு, லட்சுமி நகர், ராஜராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட பல தெருக்களில், மூன்று மாதங்களுக்கு முன் மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது.
ஆனால், குறித்த காலத்தில் பணிகள் முடியவில்லை. இதனால், வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில், கழிவுநீர் தேங்கி, தெருக்களில் ஆறாக ஓடுகிறது. தவிர, கொசுப் பெருக்கம் அதிகமாகி, தெருவாசிகளை சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாக்குகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால், உரிய பதில் இல்லை. சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து, வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:
பெரும்பாலான இடத்தில், தெரு ஓரமாகவே வடிகால் அமைக்கப்படுகிறது. அதற்காக பள்ளம் தோண்டும்போது, தெரு ஓரத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, வேறு இடத்தில் நட வேண்டும். கம்பம் அகற்றும் பணியை, மின்சார வாரியம் துரித கதியில் செய்வதில்லை. பல வாரங்களாக கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இதனால், சில தெருக்களில் வடிகால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இடையூறுகள் களையப்பட்டு, விரைவில் பணிகள் வேகம் எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.