/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெரிசலில் வேளச்சேரி போலீசார் பற்றாக்குறையால் வாகன ஓட்டிகள் திணறல்
/
நெரிசலில் வேளச்சேரி போலீசார் பற்றாக்குறையால் வாகன ஓட்டிகள் திணறல்
நெரிசலில் வேளச்சேரி போலீசார் பற்றாக்குறையால் வாகன ஓட்டிகள் திணறல்
நெரிசலில் வேளச்சேரி போலீசார் பற்றாக்குறையால் வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஆக 12, 2024 04:20 AM

வேளச்சேரி,:சென்னையின் முக்கிய பகுதியாக வேளச்சேரி உள்ளது. இங்கு, மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதனால், மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, விரைவு சாலையில் மேம்பாலம் இறங்கும் இடத்தில் இருந்து, செக்போஸ்ட் சந்திப்பு வரை, 1.5 கி.மீ., துாரம் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
இந்த சாலையில் உள்ள கடைகளுக்கு செல்லும் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதால், நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இங்கு ஏற்படும் நெரிசலை குறைக்க, கிண்டி மற்றும் வேளச்சேரி போக்குவரத்து போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசார் பற்றாக்குறை மற்றும் இருக்கிற போலீசாரும் வி.ஐ.பி., பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி செல்வதால், வேளச்சேரி பகுதியில் ஏற்படும் நெரிசலை குறைக்க முடியவில்லை என போலீசார் புலம்புகின்றனர்.
போலீசார் இல்லாததால், வேளச்சேரி பிரதான சாலை மற்றும் விரைவு சாலையில் உள்ள, கடைகள் முன், தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
போதிய போலீசார் நியமித்து, நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேளச்சேரி பகுதி நலச்சங்கத்தினர் கூறினர்.