/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் லோடு வாகனங்கள் துரைப்பாக்கத்தில் தடை விதிக்க எதிர்பார்ப்பு

ADDED : ஏப் 05, 2024 12:27 AM

துரைப்பாக்கம் ஓ.எம்.ஆரில், 20 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை பணி நடக்கிறது. இதற்காக, ஆறு வழிச்சாலையை, நான்கு வழியாக மாற்றி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் சிக்னலில் 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.
சில நாட்களில், 1 கி.மீ., துாரம் வரை வாகனங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால், அவசர வேலையாக செல்வோர் பரிதவிக்கின்றனர். தீவிர சிகிச்சைக்கு, நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களும் சிக்கிக் கொள்கின்றன.
கடும் வெயிலில், நெரிசலில் காத்திருப்பதால், வெப்பம் அதிகரித்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆறுவழிச் சாலையாக இருக்கும் போது, பீக் ஹவர்ஸ் நேரத்தில் லோடு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
தற்போது, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, கடும் நெரிசல் நிலவும் நிலையில், துரைப்பாக்கம்,சோழிங்கநல்லுார் சந்திப்பில் லோடு மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. இதற்கு தடை விதித்தால், நெரிசல் கணிசமாக குறையும்.
அதற்கு ஏற்ப, சென்னை மற்றும் தாம்பரம் காவல் ஆணையராக போலீசார், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.