/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளமாக மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் குட்டை
/
குளமாக மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் குட்டை
ADDED : மே 30, 2024 12:24 AM

பெருங்களத்துார், தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துாரில், 40 ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி, குட்டையாக இருந்த இடத்தை, 1.40 கோடி ரூபாய் செலவில் பெரிய குளமாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
தாம்பரம் மாநகராட்சி, 56வது வார்டு, பெருங்களத்துாரில், நான்காவது மண்டல அலுவலகம் எதிரே, மங்கலேரி குளம் உள்ளது. இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்தது. இப்படி, 40 ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி, குட்டையாகக் காணப்பட்டது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, துார்வாரி, ஆழப்படுத்தி, மழைநீர் தேக்கமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று, 1.40 கோடி ரூபாய் செலவில், குட்டையாக இருந்த இடத்தை பெரிய குளமாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
சுற்றுச்சுவர், நடைபாதை, மின்விளக்கு, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளும் இங்கு அமையவுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்பணி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.