/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கனரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
/
கனரக வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
ADDED : ஆக 05, 2024 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநின்றவூர், திருநின்றவூர் அடுத்த பாக்கம், புலியூரைச் சேர்ந்தவர் மணி, 64; இறுதி சடங்கு செய்யும் வேலை செய்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு, 'ஹீரோ ஸ்பிளன்டர்' பைக்கில், நெமிலிச்சேரி, 400 அடி வெளிவட்ட சாலையில், செங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஆவடி, முத்தாபுதுப்பேட்டை எச்.பி. பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதி, உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.