ADDED : ஜூலை 19, 2026 09:42 PM
அ நிறம் | அளவு
தாம்பரம்: பழைய பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, 75. இவர், வீட்டின் பின்புறம் இருந்த மரத்தில் மாங்காய் பறிக்க, நேற்று வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். மாங்காய் பறித்தபோது, கால் இடறி விழுந்து பலத்த காயமடைந்தார்.
குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
