ADDED : ஏப் 20, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருவருக்கு இரண்டு ஓட்டு
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ஊராட்சி, வில்லியம் பள்ளி ஓட்டுச்சாவடிக்கு மணிகண்டன், 20, என்ற இளைஞர் மதியம் 12:00 மணிக்கு வந்தார்.
வாக்காளர் பட்டியலில், வரிசை எண் 303 மற்றும் 308ல் அவருக்கு இரு ஓட்டுகள் இருந்தன.
அங்கிருந்த தேர்தல் அதிகாரி உட்பட அனைவரும் அதிர்ச்சியாகினர். இதனால், ஓட்டுச்சாவடியில் சிறிது நேரம் குழப்பம் நிலவியது. பின், 303ன் கீழ் மணிகண்டன் ஓட்டளித்தார். எண் 308 ரத்து செய்யப்பட்டது.

