தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தேர்தல் துணுக்குகள் -----

தேர்தல் துணுக்குகள் -----

தேர்தல் துணுக்குகள் -----


ADDED : ஏப் 20, 2024 12:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2024 12:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹிந்தியில் பெயர் இருந்ததால் மறுப்பு

ஆதம்பாக்கம் சுரேந்தர் நகர், ஆறாவது தெருவைச் சேர்ந்த தம்பதி, டி.ஏ.வி., பூத் எண், 310ல், நேற்று ஓட்டளிக்க சென்றனர். வாக்காளர் பட்டியலில், கணவரின் பெயர் ஹிந்தியில் இருந்துள்ளது.

இதனால் பூத் முகவர்கள், அவரை ஓட்டளிக்க கூடாது என, தேர்தல் அலுவலரிடம் முறையிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்காளர் வரிசை எண்ணை வைத்து, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் சோதனை செய்தனர். அதிலும் அவருடைய பெயர் ஹிந்தியில் இருந்தது. ஓட்டுச்சாவடி வாக்காளர் பட்டியலிலும், அவரது பெயர் ஹிந்தியில் இருந்ததால், ஆதம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர், சம்பந்தப்பட்ட நபரை ஓட்டளிக்க அனுமதித்தார்.

ஒரே குடும்பத்தில் 11 பேர் ஓட்டு மாயம்

கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் அப்துல் கரீம், 56. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், வியாசர்பாடி கக்கன்ஜி காலணி பகுதியில் வசித்திருந்தனர். இந்த முகவரியிலேயே இவர்களின் வாக்காளர் அடையாள அட்டை இருந்தது.

நேற்று காலை, பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க சென்றபோது, அப்துல் கரீம் குடும்பத்தில் உள்ள 11 பேருக்கு ஓட்டு இல்லை என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகளுடன் அப்துல்கரீம் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், அவர்கள் பழைய முகவரியிலேயே வாக்காளர் அடையாள அட்டையை வைத்துள்ளனர். பழைய முகவரியில் அவர்கள் வசிக்கவில்லை என்பதால் அவர்களின் வாக்காளர் அட்டை ரத்து செய்யப்பட்டிருக்கலாம்' என்றனர்.

 வடசென்னை, பெரம்பூர் ராகவன் தெருவில் உள்ள தனியார் பள்ளியில், லட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாக்காளர்கள் நேற்று ஓட்டளிக்க சென்றனர். ஆறு பேர் உடைய ஒரே குடும்பத்தில், ஒருவருக்கு மட்டுமே ஓட்டு இருக்க, மற்றவர்களின் பெயர் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.

போலீசார் அலைக்கழிப்பு

ஒரே கட்சியைச் சேர்ந்த, 5 -- 10 பேர் ஓரிடத்தில் கூடி நின்றால், பணம் வினியோகம் செய்கிறன்றனர் என, மாற்று கட்சியினர், போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர். அதுபோன்று, ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நேற்று 5 - 10 பேர் தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் அந்த இடங்களுக்கு சென்று விசாரித்தபோது, பணம் வினியோகம் செய்ய நிற்கவில்லை; ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் என தெரியவந்துள்ளது. இது போன்ற புகார்கள், அதிக அளவில் வந்ததால், போலீசார் தெருத்தெருவாக அலைக்கழிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us