/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் பணிமனை விவகாரம் பா.ஜ., ஆதரவாளர் கைது
/
தேர்தல் பணிமனை விவகாரம் பா.ஜ., ஆதரவாளர் கைது
ADDED : ஏப் 09, 2024 12:26 AM

திருமங்கலம், ஆர்.ஏ.புரம் ஆறாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சோபனா, 55. இவருக்கு, திருமங்கலம், 'எச் - பிளாக்' 16வது தெருவில், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த வீட்டை பா.ஜ., ஆதரவாளரான மீனாட்சி, 38, என்பவருக்கு, ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்த நிலையில், வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல், அதே பகுதியில் உள்ள வில்லிவாக்கம், மேற்கு மண்டல பா.ஜ., தலைவர் மருதுபாண்டியன் என்பவருக்கு, தேர்தல் பணிமனைக்காக மீனாட்சி உள்வாடகை விட்டுள்ளார்.
இது குறித்து கேட்ட போது, மீனாட்சி, மருதுபாண்டின் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக வீட்டின் உரிமையாளர் சோபனா புகார் அளித்தார்.
திருமங்கலம் போலீசார் விசாரணையில், தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில், போலியாக உரிமையாளர் போல் கையொப்பம் செய்திருப்பதும் தெரியவந்தது. மீனாட்சியை கைது செய்த போலீசார், மருதுபாண்டியனை தேடி வருகின்றனர்.

