/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீப்பற்றி எரிந்து உருகிய மின் இணைப்பு பெட்டி
/
தீப்பற்றி எரிந்து உருகிய மின் இணைப்பு பெட்டி
ADDED : ஜூன் 29, 2024 12:16 AM

அண்ணா நகர், அண்ணா நகர், மூன்றாவது அவென்யூவில், மசூதி அருகில் குடிநீர் வாரிய உந்து நிலையம் உள்ளது. இங்கு நடைபாதையில் வைக்கப்பட்ட, எச்.ஆர்.பி., எனும் 'பைபர் பாக்ஸ்' மின் மாற்றியில், நேற்று மதியம் 1:00 மணியளவில் கரும்புகை வெளியேறியது.
சில நிமிடங்களில், மின் இணைப்பு பெட்டி தீப்பிடித்தது. உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மசூதியில் இருந்தவர்கள் தீயணைப்பானை பயன்படுத்தி அணைக்க முயன்றும் முடியவில்லை. தகவலின்படி வந்த அண்ணாநகர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில், மின் இணைப்பு பெட்டி முழுதும் எரிந்தது.
'பைபர்' மின் இணைப்புப் பெட்டி என்பதால், மின் அழுத்தம் ஏற்படும் போது, அதிக வெப்பத்தால் தீப்பிடித்ததாக, மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக அண்ணா நகரில், இதேபோல் பல இடங்களில், மூன்று மின் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

