ADDED : பிப் 26, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழக மின் வாரியத்தில், 2023 டிச., முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சை விரைவாக துவக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய மத்திய அமைப்பு சங்க ஊழியர்கள், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றோர் கூறியதாவது:
மின் வாரியத்தில், 60,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு பேச்சை விரைவில் துவக்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களை, கள உதவியாளர்களாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.