/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் விருது வழங்கும் விழாவில் வலியுறுத்தல்
/
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் விருது வழங்கும் விழாவில் வலியுறுத்தல்
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் விருது வழங்கும் விழாவில் வலியுறுத்தல்
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் விருது வழங்கும் விழாவில் வலியுறுத்தல்
ADDED : செப் 04, 2024 02:00 AM

சென்னை:''பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறினால், தனி நபர் வருவாய் அதிகரித்து, நாடு முன்னேறும்,'' என, வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன் பேசினார்.
தமிழக மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம், பெண்கள் சேவை அறக்கட்டளை, லயோலா கல்லுாரி ஆகியவை சார்பில், பெண்கள் திறன் மேம்பாட்டுக்கான மாநில கருத்தரங்கம், சென்னை லயோலா கல்லுாரியில் நேற்று நடந்தது.
அதில், சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதுகளை பிங்கி, ஆனந்தலட்சுமி, பிரமிளா ஆகியோருக்கு வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் விருதுகளை வழங்கி, மாநாட்டு மலரை வெளியிட்டார்.
விஸ்வநாதன் பேசியதாவது:
இயற்கையிலேயே பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் சமுதாயமாக தமிழ் சமுதாயம் இருந்தது. ஆனால், மற்ற நாடுகளை விட நம் நாட்டில் பெண்களின் கல்வி விகிதம் குறைவாக உள்ளது. பெண்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், சம உரிமை கிடைக்க வேண்டும்.
நாம், பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அதேசமயம், தனிநபர் வருவாயில், 140 வது இடத்தில் உள்ளோம். தனி நபர் வருவாய் உயர, பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேறி, நாட்டை முன்னேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில், 'நேச்சுரலே' நிறுவனர் சம்யுத்தா ஆதித்தன், லயோலா கல்லுாரி முதல்வர் லுாயிஸ் ஆரோக்கியராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், மூலிகை நாப்கின், ஷாம்பூ, சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டது. பெண் தொழில்முனைவோர் தயாரித்த பொருட்களின் விற்பனை கண்காட்சியும் நடந்தது.